--- --:--:-- --

பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து புகை பிடித்த பள்ளி மாணவர்கள்..!

9

யிலாடுதுறை பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவர் புகைபிடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அரசு பள்ளி மாணவன் பயணிகள் அமர்ந்திருக்கும் இடத்தில் புகை பிடித்துள்ளான்.

 

இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மூன்று பேர் பெட்டிக்கடையில் சிகரெட்டு வாங்கும் போட்டோ மற்றும் மாணவன் புகைப்படம் எடுக்கும் வீடியோ தற்பொழுது வாட்ஸ் அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

காவல்துறையினர் மற்றும் அரசு பணி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் மாணவர்களை கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

Right Menu Icon