பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா
பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும்பணி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதனைத்தொடா்ந்து பள்ளி வளாகம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் லாரல் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் மற்றும் பள்ளி இயக்குனர்கள், தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பட்டுகோட்டை மனோரா ரோட்டரி சங்கத்தின் தலைவர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




