துப்புரவு பணியாளர்கள் வயிற்றில் அடிக்கும் ஒப்பந்ததாரர்..? முறையாக ஊதியம் வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெண்களுக்கு 190 ரூபாயும், ஆண்களுக்கு 230 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஊதியம் தங்களுக்கு போதுமானதாக இல்லை என்று கவலை தெரிவித்துள்ள துப்புரவு பணியாளர்கள் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக கடந்த 20ஆம் தேதி முதல் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு உரிய ஊதியத்தை முறையாக வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Leave a Reply