தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த இராஜாமடம் அருகே உள்ள ஆன்டிவயல் எனும் கிராமத்தில் உள்ள சிறுபகுதி காரிபுறம்.
இந்த பகுதியில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் கொடி ஏற்றி உள்ளனர். இதனைப் பொறுக்க முடியாத அதே பகுதியை சேர்ந்த திமுக கட்சியின் ஒன்றிய பொறுப்பிலிருக்கும் சரவணன், சக்தி, சாந்தி மேலும் பலர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி எப்படி இங்கே ஏற்றலாம் என்று தாக்குதலில் ஈடுபட்டதில் கர்ப்பிணிப்பெண் துர்கா உட்பட இரண்டு பெண்கள் ஒரு ஆண்கள் என பலத்த காயமடைந்து அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து,கொலைவெறி தாக்குதல் மற்றும் வெறித்தனத்தில் ஈடுபட்ட திமுக ஒன்றிய பொறுப்பிலிருக்கும் சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடியாக சரவணனை கைது செய்யப்படவில்லை எனில் மாபெரும் மக்கள் போராட்டம் ஈடுபட்டு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தை முற்றுகையிடுவது என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.