--- --:--:-- --

திருமுருகன்பூண்டி நகராட்சி மக்களுக்கு நகராட்சித் தலைவர் வேண்டுகோள்..!

3

திருமுருகன்பூண்டி நகராட்சியில்  அனைத்து வார்டுகளிலும் உள்ள  பிரச்சனைகளையும் நேரில் மனுவாக பெற்று  உடனடி தீர்வு காணப்படும் –
பொதுமக்களுக்கு தலைவர் நா.குமார் வேண்டுகோள்..!

 

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.  இந்த வார்டுகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மனு கொடுத்து வருகிறார்கள்.

 

அவ்வாறு புகார் கொடுக்கும் பொழுது அது சரியானபடி கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பொதுமக்கள் புகார் கொண்டு வரும் போது நகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள் விடுமுறையில்  இருந்தாலோ,  அல்லது மாற்றுப் பணிக்காக  வெளியே சென்று இருந்தாலோ  சரியான  கிடைக்காமல் பொதுமக்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வந்தனர்.

 

இதனை தொடர்ந்து திருமுருகன் பூண்டி நகராட்சித் தலைவர் நா. குமாரிடம், துணைத் தலைவர் ராஜேஸ்வரி பொன்னுசாமி  மற்றும்  25 வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

 

இதுகுறித்து தலைவர் நா.குமார் கூறியதாவது :  திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் ( நா. குமார் ) நான்  கவுன்சிலர்களுடன் ஆலோசித்து நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு உள்ள வளாகத்தில் ஒவ்வொரு வாரமும்  திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நேரில் நானும் கவுன்சிலர்களும் வார்டு வாரியாக புகார் மனு பெற முடிவு செய்துள்ளோம்.

 

மேலும்,புகார் மனுக்கள் வாங்குவதற்காக இன்ஜினியரிங் படித்த பாரதி என்ற பெண்ணும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அதனால் அதனால் பூண்டி நகராட்சியில் உள்ள 27 வார்டு மக்களும் தங்கள் வார்டு சம்பந்தமான பிரச்சினைகளை மனுவாக எழுதி நேரடியாக நகராட்சி அலுவலகத்தில் கொடுக்க பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.

 

மனுவை  நேரடியாக பெற்று, பார்வையிட்டு  அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். என்றார். குறிப்பாக  AD காலனியில் யாரேனும் இறந்தால் அதற்கான நிதி கடந்த 2 வருடங்களாக கொடுக்கப்படவில்லை. இந்த பணி துரிதப்படுத்தப்பட்டு நிதி பெற்றுத் தரப்படும்.

 

அதே போல் அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் வேலைகள் தவிர பிற அனைத்து வேலைகளுக்கும் மனு பெறப்பட்டு, நாட்குறிப்பில் எழுதப்பட்டு அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் முன்னிலையில் அதற்கான வேலைகள் முடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தார்.

Right Menu Icon