--- --:--:-- --

அதிகரிக்கும் கருக்கலைப்பு மாத்திரைகள்.. அதிகாரிகள் கடும் எச்சரிக்கை..!

4

கோவையில் தனியார் கிளினிக் மற்றும் மருந்து கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள மருந்து கடைகள் கிளினிக்குகளை கோவை மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டனர்.

 

ஐந்து இடங்களில் மேற்கொண்ட சோதனையில் எந்தவித சட்டவிரோத செயல்பாடுகள் நடந்ததற்கான தடயங்கள் கிடைக்கப்பெறவில்லை. இது குறித்து பேசிய பணிகள் துறை இணை இயக்குனர் ராஜசேகர் மகப்பேறு மருத்துவர் பரிந்துரை இன்றி கரு கலைப்பு மாத்திரைகள் பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

 

அரசாங்க அங்கீகாரம் இல்லாமல் தகுந்த மருத்துவ தகுதி இல்லாமல் கருகலைப்பில் ஈடுபட்டால் மூன்று முதல் ஏழு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

 

Right Menu Icon