500 ரூபாய் கொடுக்காததால் பாஸ்போர்ட்டை கிழித்த தபால் ஊழியர்..!
உத்திரபிரதேசத்தில் 500 ரூபாய் லஞ்சம் தர மறுத்ததால் பாஸ்போர்ட்டை தபால்காரர் கிழித்து எரிந்த வீடியோ வெளியாகியுள்ளது. உத்தர பிரதேசத்தில் ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. அந்த பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்டவருக்கு தர அங்குள்ள தபால்காரர் 500 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் தர மறுத்ததால் கோபம் அடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டில் உள்ள முக்கிய பக்கம் ஒன்றை கிழித்துள்ளார். இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவலர்கள் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






