சென்னையை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி – ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே நாளை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே வங்கக் கடலில் 280 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அதேபோல் அரபி கடல் காற்றழுத்தம் தனியாக பிரிந்து மேற்கு நோக்கி மகாராஷ்டிரா, கோவா சென்றுவிட்டது.
அதன் காரணமாக சென்னைக்கு கனமழை ஆபத்து நீங்கியுள்ளது. இருப்பினும் அடுத்து வரக்கூடிய 2 நாட்களில் சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




