அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து துடிதுடித்து இளைஞர் உயிரிழப்பு..!
காஞ்சிபுரத்தில் மின் வயரை தெரியாமல் மிதித்த இளைஞர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பூக்கடைசத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினித் குமார். இவரது வீட்டின் அருகாமையில் மின்வயர் அருந்து கீழே விழுந்துள்ளது .
இதனை அறியாமல் வினித் குமார் பிடித்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியாகியுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






