பூனையை காப்பாற்ற சென்று கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியான இளைஞர்..!
கிணற்றில் தவறி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். கோவை அருகே நரசிம்மநாயகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது வளர்ப்பு பிராணியான பூனையை பிடிக்க சென்றுள்ளார்.
அப்பொழுது கிணற்றில் பூனை சென்ற பொழுது கார்த்தி விடாமல் தொடர்ந்து சென்று பூனையே பிடித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக பூனை உடன் சேர்ந்து அவர் அந்த 150 ஆடி ஆழ கிணற்றில் விழுந்தார். கார்த்தி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






