--- --:--:-- --

மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் தற்கொலை

download (3)

நெல்லை மாவட்டம் அருகே மனைவி தூக்கிட்டு இறந்த துக்கம் தாளாமல் அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வைய கவுண்டன் பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.கடந்த 18ஆம் தேதி இருவருக்கும் தகராறு முக்கிய தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தேவகன்னி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதையடுத்து மிகுந்த சோகத்தில் இருந்து வந்த மாரியப்பன் தனது நான்கு குழந்தைகளையும் இனி எவ்வாறு வளர்ப்பது என பலரிடம் புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் வேப்பமரத்தில் மாரியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இருக்கும் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon