பாகிஸ்தானின் துப்பாக்கி சூடு..20 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!
பாகிஸ்தானில் தென் மேற்கில் நடைபெற்ற மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு நிலக்கரி சுரங்கம் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





