தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்..!
தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி கடைவீதிகளில் அவல், பொறி உட்பட ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களின் விற்பனை கலை கட்டியது.
அதே சமயம் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இருப்பினும் வழக்கத்தை விட பொதுமக்கள் அதிகமாகவே பூக்களையும் மாலைகளையும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





