ஹரியானா தேர்தல் தோல்வி..காங்கிரசார் ஆலோசனை..!

மின்னணு வாக்கு இயந்திரக் குளறுபடி, உட்கட்சிப் பூசல் என பல காரணங்களால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக காங்கிரஸ் தேசிய பொருளாளர் அஜய் மகான் தெரிவித்துள்ளார்.

 

ஹரியானா மாநில பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் மக்களவை தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் தேர்தல் நேரில் மேலிட பார்வையாளர்கள் அசோக் கெலாட், அஜய் மகான் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

 

இதன்பு செய்தியாளர்களிடம் பேசிய அஜய் மகான் மின்னணு வாக்கு இயந்திரக் குளறுபடிகள், உட்கட்சி பூசல் என பல காரணங்களால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

 

எனினும் இந்த பிரச்சனைகள் குறித்து ஓரிரு மணி நேரங்களில் விவாதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹரியானா தேர்தல் குறித்து காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி இருந்தன.