--- --:--:-- --

தங்க சங்கிலியை தொலைத்த சுற்றுலா பயணி..மீட்டுக் கொடுத்த சிறுவர்கள்..!

6

திருப்பூர் மாவட்டம் அமராவதி முதலை பண்ணையில் சுற்றுலா பயணி ஒருவர் தவறவிட்ட தங்க சங்கிலியை மீட்டுக் கொடுத்த சிறுவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

உடுமலை அருகே உள்ள அமராவதி முதலை பண்ணை சுற்றுலா வந்த திருச்செந்தூரை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் தனது மூன்று பவுன் தங்கச் சங்கலியை தவற விட்டுள்ளார்.

 

அதே நேரம் முதலை பண்ணையில் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த அமராவதி நகரை சேர்ந்த சிறுவர்களான சரவணன் கிரி மற்றும் பிரதீஷ் ஆகிய இருவரும் அந்த சங்கிலியை கீழே கிடப்பதை பார்த்துள்ளனர்.

 

யார் ஒருவர் அவரது தங்கசங்கலியை தவற விட்டுள்ளார் என்பதை உணர்ந்த அந்த சிறுவர்கள் அதனை முதலில் பண்ணையை பராமரித்து வரும் வனத்துறை நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து தங்க சங்கிலியை தொலைத்தவர்கள் அதனை தேடி வந்து வனத்துறையினரிடம் பெற்று சென்றுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon