--- --:--:-- --

கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..தீவிரவாதிகள் அச்சுறுத்தலா..?

5

பெங்களூரில் உள்ள கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரில் உள்ள சில கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் 5:00 மணிக்குள் கல்லூரிகளில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

 

இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்களை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon