--- --:--:-- --

நெல்லையில் பெண்ணாசை காட்டி அட்டூழியம்..!

6

நெல்லையில் இளைஞர் கொலை வழக்கில் ஒருவரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர். உடலில் காயங்களுடன் இளைஞர் சடலமாக கிடந்த நிலையில் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவாக இருந்த காட்சியை வைத்து செல்வியிடம் விசாரித்தனர்.

 

அதில் இறந்து கிடந்தவர் செல்வியின் மருமகன் ஆன மணிகண்டன் என்பது தெரியவந்தது. மணிகண்டன் ஒருவரின் செல்போனை பிடுங்கி செல்வியிடம் கொடுத்ததை கண்டுபிடித்த போலீசார் செல்போன் எண்ணை வைத்து விசாரித்து முருகேசனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 

 

இதில் சம்பவத்தன்று மணிகண்டன் பெண்ணாசை காட்டி அழைத்துச் சென்று செல்போனை பிடுங்கி செல்வியிடம் கொடுத்து அனுப்பியதாகவும் இதில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை அங்கு கடந்த கட்டையால் தாக்கியதாகவும் முருகேசன் தெரிவித்தார்.

 

Right Menu Icon