--- --:--:-- --

நிலப்பிளவை ஆய்வு செய்த பசுமை தீர்ப்பாய அதிகாரிகள்..!

5

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட நிலப்பிளவை மத்திய அரசு பசுமை தீர்ப்பாய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் வனப்பகுதியில் அண்மையில் நிலப்பிளவு ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதைத்தொடர்ந்து புவியியல் வல்லுனர் அமைப்பினர் அந்த பகுதியை ஆய்வு செய்தது.

 

இதையடுத்து மத்திய அரசின் பசுமை தீர்ப்பாய அதிகாரிகள் குழு பிளவு ஏற்படாத பகுதியை ஆய்வு செய்வதன் தொடர்ச்சியாக கொடைக்கானலில் பிற இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக கருதப்படும் இடங்களையும் இந்த குழு பார்வையிட உள்ளதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon