--- --:--:-- --

அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்..!

3

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின், பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி) மற்றும் திருப்பூர் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான கண் பரிசோதனை முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.

 

முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி எஸ் எம் சி தலைவர் ஈஸ்வரி அனைவரையும் வரவேற்றார். திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் குத்து விளக்கு ஏற்றி வைத்து கண் பரிசோதனை முகாமை தொடக்கி வைத்தார்.

 

முகாமில் சேவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் பாஸ்கரன், திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் ரவிச்சந்திரன், ஜெய்வாபாய் பள்ளி எஸ் எம் சி உறுப்பினர் முத்தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 406 மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் திருப்பூர் தி ஐ ஃபவுண்டேஷன் மக்கள் தொடர்பு அதிகாரி சரவணகுமார் தலைமையில்
6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

 

இதில் கண்ணில் அதிகம் குறைபாடு இருந்த 21 மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடி அணிய பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முகாமிற்கான ஏற்பாடுகளை அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எஸ் எம் சி உறுப்பினர்கள் சஃபியுல்லா, ஞான சௌந்தரி, ஜோதி, கார்த்திகா, கீர்த்திகா, செல்வ புவனேஸ்வரி ஆசிரியர் பிரதிநிதி முத்துக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் எஸ் எம் சி உறுப்பினர் ரமேஷ் நன்றி கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon