--- --:--:-- --

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு!

1

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட அரசு கண்ணனுக்கு துணை வட்டாட்சியர் பதவியிலிருந்து தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon