நவாஸ்கனி பதிலளிக்க உத்தரவு
மக்களவை தேர்தல் வெற்றி தொடர்பாக நவாஸ்கனி MP பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி வெற்றி பெற்றதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
வேட்புமனுவில் உண்மைத் தகவல்களை நவாஸ்கனி மறைத்ததாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். வழக்கின் விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




