வாணியம்பாடியில் நூதன முறையில் செல்போன் திருட்டு..!
வாணியம்பாடியில் பூக்கடையில் நின்று கொண்டிருந்தவர்களிடம் இருந்து நூதன முறையில் செல்போன் திருடப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியை சேர்ந்தவர் கே.சிவகுமார்.
இவர் சிஎன் சாலையில் உள்ள பூக்கடைக்கு சென்று பூ வாங்கியுள்ளார். அப்போது அருகில் வந்தடைந்த மர்ம நபர் சட்டை பையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை நூதன முறையில் திருடி கொண்டு அங்கிருந்த தப்பினார்.
இது குறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





