நாளை மாலை துணைநிலை ஆளுநரை சந்திக்கிறார்..!
டெல்லி CM அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மாலை துணைநிலை ஆளுநரை சந்திக்க உள்ளதாக AAP அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற AAP கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டதாகவும், அதில் அடுத்த CM குறித்து ஆலோசித்ததாகவும், நாளை மீண்டும் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறும் கூட்டத்திற்கு பின் துணைநிலை ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என கூறப்படுகிறது.





