--- --:--:-- --

சாக்கு மூட்டையில் எலும்புக்கூடுகள்..பீதி அடைந்த மக்கள்..!

8

பெரம்பலூர் அருகே ஏரிக்கரையில் சாக்கு மூட்டையில் எலும்பு கூடுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தில் ஏரிக்கரையில் சாக்கு மூட்டைக்குள் எலும்புக்கூடுகள் இருந்துள்ளன.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் எலும்பு கூடுகளை கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இடுகாடாக இருந்த பகுதியில் வீடுகள் கட்டும் பொழுது அஸ்திவாரத்திற்காக பள்ளம் தோண்டிய பொழுது இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு ஏரியில் வீசப்பட்டு இருக்கலாம் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இருப்பினும் இதுகுறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon