குழியில் தவறி விழுந்த சிறுமி..நீண்ட நேரம் போராடி மீட்பு..!
உத்திரபிரதேசத்தில் தண்ணீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்து சிறுமி மீட்கப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் ராம்கூர் அருகே சாலையில் நடந்து சென்ற சிறுமி ஒருவர் மின் கம்பம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பள்ளத்தில் விழுந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர். தற்பொழுது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.






