குரங்கம்மை: அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு
குரங்கம்மை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், போதுமான மருந்துகள் உள்ளதா என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தொற்று இருப்பதாக சந்தேகப்படும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.





