விநாயகர் சிலையை கரைத்து திரும்பிய பொழுது நேர்ந்த சோகம்..!
போடி அருகே விநாயகர் சிலையை கரைத்து ஊர் திரும்பிய பொழுது விபத்து ஏற்பட்டதில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் தேவாரம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அருகில் உள்ள டிராக்டர்கள் 100 ஆட்டோக்கள் மூலமாக ஊர்வலமாக சென்றனர்.
அதன்படி மறவபட்டி கிராமத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் மார்க்கையின் கோட்டையில் உள்ள ஆற்றில் விநாயகர் சிலையை கரைத்து விட்டு டிராக்டரில் திரும்புகின்றனர். அப்பொழுது லட்சுமி நாயக்கன்பட்டி பகுதியில் சேக்டர் திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த திட்டத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தேவாரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.





