--- --:--:-- --

எய்ட்ஸ் பாதிப்பு 0.27 சதவீதமாக குறைந்து விட்டது!

download (7)

கியூபாவிற்கு அடுத்தபடியாக தற்போது தமிழகத்தில்தான் தாயிடமிருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுவது முழுமையாக கட்டப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அவர்களுக்காகப் பணியாற்றும் தன்னார்வ அமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற முதல் அமைச்சரிடம் பேசி நிதி ஏற்பாடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். எச்ஐவி பாதித்த தாயிடமிருந்து குழந்தைக்கு தொற்று ஏற்படுவதை தடுக்க அனைத்து மாவட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பலனாக தாயிடமிருந்து குழந்தைக்கு எச்ஐவி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்தி விட்டதாகவும் அவர் கூறினார் .

 

2013 ஆம் ஆண்டில் எச்ஐவி பாதிப்பு 0.83 ஆக இருந்ததாகவும் தற்போது 0.27 ஆக குறைந்து விட்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon