பன்றி காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்த சம்பவத்தால் கேரள மக்கள் அதிர்ச்சி..!
கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மினி.
இவர் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் மற்றும் தலைவலியால் சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த பொழுது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
அதனால் தனிவார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தொடர் கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்ததையடுத்து திருச்சூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





