குப்பை தொட்டியில் கிடந்த பெண் குழந்தை..!
சென்னை சிஐடி நகரில் குப்பைத்தொட்டியில் பெண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தனம் சிஏடி நகர் நான்காவது பிரதான சாலையில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
அருகில் இருந்த மெக்கானிக் கடை உரிமையாளர் சென்று பார்த்த பொழுது அங்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது தெரிய வந்தது. நிகழ்விடத்திற்கு சென்ற சைதாப்பேட்டை காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து ஒப்படைத்தனர்.
அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது இரண்டு பெண்கள் குழந்தையை குப்பை தொட்டியில் போட்டு சென்றது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





