--- --:--:-- --

பழனியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு..!

1

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

 

சிவபெருமான், விஷ்ணு, பார்வதி, அம்மன் என பல்வேறு கடவுள்களை தமிழ் மக்கள் வழிபட்டு வந்தாலும் தமிழ்க் கடவுள் என போற்றும்படியாக முருகப்பெருமானுக்கு அவர்கள் மனதில் தனியிடம் உண்டு.

 

அத்தகைய முருகப்பெருமானுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் அறநிலையத் துறை சார்பில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு இன்றும் நாளையும் ஏற்பாடு செய்துள்ளது.பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் காலை 8.55 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடி சுவாமிகள் மாநாட்டு கொடியை ஏற்றி வைக்கிறார்.

 

அமைச்சர் பெரியசாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அமைச்சர் சக்கரபாணி முன்னிலை வகிக்கிறார். திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் வேல் கோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

 

மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.இதேபோல், கடந்த 2020ஆம் ஆண்டில் பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை முருகனின் அறுபடை கோயில்களை மையமாக வைத்து வேல் யாத்திரை நடத்தினார்.

 

முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறை நாளாக கடந்த 2021-ல் அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.அந்த வரிசையில் தற்போது திமுக அரசும் முத்தமிழ்க் கடவுள் முருகனுக்காக பிரமாண்டமான மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon