உரிமை தொகையால் ரேஷன் அட்டை தாமதம்: ராமதாஸ்
புதிய ரேஷன் அட்டைகள் வழங்க தாமதிப்பதாக, தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், மகளிர் உரிமைத் தொகைக்கு அதிக விண்ணப்பங்கள் வருவதை தவிர்க்கவே, அரசு இவ்வாறு செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், ரேஷன் அட்டைகள் பெறுவது மக்களின் உரிமை என்பதால், இதுவரை விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உடனே ரேஷன் அட்டைகள் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




