புதுச்சேரியில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா..!
புதுச்சேரியில் நடைபெற்று வரும் சர்வதேச பட்டம் விடும் திருவிழா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது. புதுச்சேரியில் சின்ன வீராம்பட்டி ஈடன் கடற்கரை பகுதியில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை சட்டப்பேரவை செல்வம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் டிராகன், குதிரை, சுறா மீன், பாண்டா கரடி, கொரில்லா, குரங்கு, புலி, ஆக்டோபஸ் உட்பட பல்வேறு உருவங்களில் வானில் சிறகடித்து பறந்த பட்டங்களை மக்கள் கண்டுபிடித்தனர்.
இதில் இந்தியா தவிர தாய்லாந்து ஜெர்மனி தைவான் போன்ற நாடுகளில் இருந்து பட்டம் விடும் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த விழா 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





