மருந்து ஆலை விபத்து..உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி அறிவிப்பு..!
ஆந்திரா மருந்து ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவியை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அனகாப் பள்ளி அடுத்த அச்சுதாபுரம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
அந்த தீ விபத்தில் சிக்கிய 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாநில முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடியும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சமும், சிறுகாயம் ஏற்பட்டவர்களுக்கு 25 லட்சமும் வழங்கப்படும் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.






