சட்டவிரோதமாக விற்கப்படும் மது..!
செய்யாறு அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்ற இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காம்பன் நகரில் சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்த தேவி, காங்கி, மணி, மோகன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
குறிப்பாக அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 30 பீர் பாட்டில்கள் உட்பட 145 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





