--- --:--:-- --

அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ்.. கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி விபத்து..!

8

மேல்மருவத்தூர் அருகே அதிவேகமாக சென்ற தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஆட்டோ மீது மோதி விபத்திற்கு உள்ளானது. திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஒன்று சென்னை நோக்கி அதி வேகமாக சென்று கொண்டிருந்தது.

 

மேல்மருவத்தூர் அருகே சென்ற பொழுது ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி முன்னாள் சென்ற ஆட்டோமோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்மருவத்தூர் காவலர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon