வீட்டில் சடலமாக கிடந்த ரவுடி..அலறிய பெண்..!
சென்னை வியாசர்பாடியில் சரித்திர பதிவேடு குற்றவாளி கை, தலையில் கடப்பாக்கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். 17 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆசை தம்பி வழக்கமாக விமலா என்பவரது வீட்டிற்கு செல்லும் நிலையில் நேற்று அங்கு இரவு சென்றுள்ளார்.
வெளியே சென்ற விமலா வீடு திரும்பிய பொழுது ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் ஆசை தம்பி கிடப்பதாக காவல்துறைக்கு தெரிவித்ததையடுத்து சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
விமலா மற்றும் அவரது அண்ணன் சிவகுமாருடன் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கொலை தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் ஐந்து பேரை கைது செய்தனர். ஆட்டோ ஓட்டுநர்கள் ஆசை தம்பியை கொலை செய்தார்களா என்று கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





