--- --:--:-- --

தொண்டியில் மாவட்ட  அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டி நடைபெற்றது..!

9

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டியில் ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம்  21ஆவது மிஸ்டர் ராம்நாடு போட்டி தனியா மஹாலில் இன்று நடைபெற்றது.

 

இப்போட்டிக்கு மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் ராமநாதபுரம் அதன் தலைவர் ராஜாமணி தலைமையில், தொண்டி ஐக்கிய ஜமாத் கௌரவ தலைவர் அபூபக்கர், இந்து தர்ம பரிபாலன் சபை முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயூப்கான், இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜசேகர், ஐக்கிய ஜமாத் தலைவர்  ஹிப்பத்துல்லாஹ், மாவட்ட இறகு பந்து கழக மாவட்ட துணைத் தலைவர் சாதிக்பாட்சா ஆகியோர்கள் முன்னிலையில் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரையாற்றினார்.

 

இந்த போட்டி துவங்குவதற்கு முன்பாக தொண்டி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் புவனேஸ்வரி, தமிழ் அறம் பவுண்டேஷன் நிறுவனர் கல்யாணி, சேவியர் ட்ரிபிள் எக்ஸ் பெஸ்ட் மோட் ஜிம், ராமேஸ்வரம் நிறுவனர் மகேஸ்வரி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றினர். ஆணழகன் போட்டியை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மாவட்ட அலுவலர் தினேஷ்குமார் துவக்கி வைத்தனர்.

இப்போட்டியில் 10 வயதிற்கானவர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு தங்களது உடல் திறமையை காட்டியது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மெடல் சான்றிதழ் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

அதனை தொடர்ந்து 17 வயதிற்கான ஆணழகன் போட்டி நடைபெற்றது அதில் 10 பேர் கலந்து கொண்ட நிலையில் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம், தொண்டி செய்திருந்தது

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon