--- --:--:-- --

பிரிட்ஜுக்குள் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன இறைச்சி..!

9

ன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார், திற்பரப்பு அருவி பகுதியில் உள்ள வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

 

திற்பரப்பு சந்திப்பு பகுதியில் இருந்த உணவகம் ஒன்று நடத்திய சோதனையில் அழுகிய நிலையில் குளிர்சாதனை பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 15 கிலோ இறைச்சி மற்றும் உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

இந்த சோதனையில் மொத்தமாக மூன்று கடைகள் அடைக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

 

Right Menu Icon