கரகாட்டத்தில் நடந்த கத்திக்குத்து..!
நெல்லை மாவட்டம் காரம்பாடி கிராமத்தில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் இரண்டு பேர் குத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 போலீசார் தேடி வருகின்றனர்.
சுடலை மாடசுவாமி கோயில் கொடை விழாவில் கரகாட்டம் நடைபெற்ற பொழுது இளைஞர்கள் சிலர் பணம் கொடுத்தனர். அன்பளிப்பாக கரகம் ஆடியவர்களுக்கு கொடுத்தனர். பெயரை மேடையில் வாசித்த பொழுது மதியழகன் பெயர் விடுபட்டதாக கூறப்படுகிறது. தனது பெயர் விடுபட்டது குறித்தும் மதியழகன் கேள்வி கேட்டதால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் சகோதரர் மதி ராஜா ஆகியோர் குத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க வந்த உறவினரான மகேஸ்வரன் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். தகராறில் ஈடுபட்ட இருதரப்பினரும் கஞ்சா போதையில் இருந்ததாக அந்த பகுதியினர் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





