கனமழையால் காற்றில் பறந்த தொடக்கப்பள்ளி மேற்கூரை: கவனிக்குமா கல்வித்துறை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கனமழையால் சேதமுற்ற அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வி கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பட்டிஅடைக்கன் பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மேற்கூரைகள் அண்மையில் பெய்த கன மழையால் சேதம் உற்று கோடுகளின் ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது.
ஓடுகள் விடிந்து பெரிய அளவில் ஓட்டைகள் ஆங்காங்கே காணப்படும் சூழலில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஏதேனும் அசம்பாவிதம் நேரிடும் முன்னர் மாவட்ட கல்வித் துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





