--- --:--:-- --

குற்றவாளியை பிடிக்க உயிரை பணயம் வைத்த போலீஸ்..!

2

ர்நாடகாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போக்குவரத்து சிக்னலில் காவலர் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுநாத் பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு மோசடி வழக்குகளில் ஈடுபட்டிருந்தார்.

 

அதில் கடந்த ஐந்தாம் தேதி தும்கூர் பகுதியில் சுற்றித்திரிந்ததை அறிந்த காவலர் தொண்டு லிங்கையா அவரை பின் தொடர்ந்து சென்றார். அப்பொழுது மஞ்சுநாத் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றார். ஆனால் லிங்கய்யா அவரது இருசக்கர வாகனத்தை பிடித்தவாறு தடுத்து நிறுத்த முயன்றார்.

 

எனினும் தொடர்ந்து வாகனத்தை இயக்கியதால் காவலர் சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். பொதுமக்கள் உதவியுடன் மஞ்சுநாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டா.ர் குற்றவாளியை பிடிக்க காவலர் தனது உயிரை பணயம் வைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon