திருவாடானை அருகே ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குட உற்ச விழா நடைபெற்றது..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆண்டிவயல் கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் அருள்மிகு ஸ்ரீ அகோர வீரபத்திரன் ஆலயத் ஆடிப்பெருக்கு விழா கடந்த வியாழக்கிழமை காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
ஒவ்வொரு நாளும் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்று பால்குட உற்சவம் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர்.

பக்தர்கள் கொண்டு வந்த பாலை பாலால் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் , பொது மக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.





