--- --:--:-- --

திருவாடானை அருகே ஆடி உற்சவத்தை முன்னிட்டு பால்குடம் காவடி  எடுத்தல் நடைபெற்றது..!

11

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொத்தார்கோட்டை கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர், ஸ்ரீ கருப்பர், ஸ்ரீ காளி ஆலய கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன்  விழா துவங்கியது.

 

ஒவ்வொரு நாளும் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்று பால்குடம், காவடி உற்சவம் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் காவடி எடுத்து வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர்.

பக்தர்கள் கொண்டு வந்த பாலால் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் , பொது மக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Right Menu Icon