--- --:--:-- --

பென்னி பார்த்திங் சைக்கிளில் சாதனை தனியார் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரியான பி.கே.குமார் !!!

Capture

ஒரே நேரத்தில் இரு திசையில் கைகளை திருப்புவது,பழங்கால சைக்கிளான பென்னி பார்த்திங் சைக்கிளில் சாதனை என பல்வேறு சாதனைகள் செய்து அசத்தி வருகிறார் தனியார் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரியான பி.கே.குமார்.

சைக்கிள் கண்டுபிடிப்பின் ஆரம்பகால கண்டுபிடிப்பில் பென்னி பார்த்திங் எனும் சைக்கிள் முன்னோடியாக உள ளது.முன்புறம் பெரிய சக்கரங்களுடனும் பின் புறம் சிறிய சக்கரம் என செயின் இல்லாமல் ஓடக்கூடிய இந்த (Penny Farthing) என்ற சைக்கிள் அந்த காலத்தில் மிக பிரபலம் பெற்றது.இந்நிலையில் அந்த சைக்கிளை இன்றளவும் பயன்படுத்தி வருகிறார் இன்ஸ்ப்யர் குமார் என அழைக்கப்படும் பி.கே.குமார்.கோவை சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனையில் முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் இவர்,பல்வேறு சாதனைகளுக்கு சொந்தகாரர்.

 

சாதனைகள் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ள இவர்,தாம் வசித்துவரும் சரவணம்பட்டி பகுதியில் இந்த சைக்கிளிலேயே வலம் வருகிறார்.வெறுமனே இதனை ஓட்டுவதும் மட்டுமில்லாமல் இதில் பல உலக சாதனைகளை படைத்து விருதுகளையும் இவர் வாங்கி குவித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் 21.3 கி.மீ தூரம் சென்று சாதனை படைத்ததுடன், பொன்முடியிலிருந்து 12.7 கி.மீ தூரத்தில் உள்ள கல்லார் வரை உள்ள 22 ஹேர்பின் வளைவுகளை இந்த சைக்கிளில் கடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் இவர், ஒரே நேரத்தில் கைகளை வலப்புற மற்றும் இடப்புற திசையில் சுற்றுவதிலும் சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இது போன்று சாதனைகள் செய்வதை தாம் வழக்கமாக்கி கொண்டுள்ளதாக கூறும் அவர் தமது இந்த சாதனையை பாராட்டி முத்தூஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் முத்து சரவணகுமார் விருது அளித்து பாராட்டியது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon