நாய் கூண்டில் வசித்த வட இந்தியர்..ரூ.500 வாடகை..!
கேரளாவில் இல்ல நாய்களை அடைக்கும் கூண்டில் வெளி மாநில தொழிலாளி ஒருவர் தங்கி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் வீட்டில் உள்ள நாய் கூண்டில் வட இந்திய தொழிலாளி ஒருவர் தங்கி இருந்த அந்த பேரூராட்சி அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் வெளி மாநில தொழிலாளி ஒருவர் தங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வாடகை கொடுக்க கூட பணம் தராத காரணத்தால் அவர் வீட்டில் உள்ள நாய்கூண்டில் வாடகைக்கு தங்கி வந்தது தெரிய வந்தது. வீட்டின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





