சமாதானம் பேச வந்த நண்பனை சரமாரியாக கத்தியால் குத்தி பழி..!
சமாதானம் பேச சென்ற இளைஞர் சூரி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் திருப்பரங்குன்றம் மேல கச்சேரியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
கடந்த தீபாவளியன்று ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இதனை தீர்க்கும் வகையில் கார்த்திக்கின் வீட்டிற்கு தனது நண்பருடன் ராஜேந்தர் பிரசாத் சுபாஷ் சென்றதாக சொல்லப்படுகிறது.
சமாதான பேச்சுவார்த்தையின் பொழுது இருவருக்கும் இடையே தகராறு முற்றி வீட்டிலிருந்த சூரி கத்தியால் ராஜேந்திர பிரசாத்தை தாக்கியதில் ராஜேந்திர பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளைஞர் கார்த்திகை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





