--- --:--:-- --

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறாரா? – அமைச்சர் துரைமுருகன் பதில்

1

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர்களைச் சந்திந்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போவதாக பேசப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “அங்கெங்கில்லாமல் எங்கும் இது ஒலித்து வருகிறது. இதை முடிவெடுக்க வேண்டியவர்கள் முதல்வர் ஸ்டாலின்” என்றார்.

 

”துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, ” உதயநிதி ஸ்டாலின் முறையாக கட்சியில் வளந்தவர். கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர். என்னுடைய தனிப்பட்ட மரியாதையை விட கட்சியினுடைய நோக்கம், பலம் ஆகியவற்றை நான் எதிர்பார்ப்பவன்.

 

காரணம் நான் என்னுடைய வாழ்க்கையில் 60 ஆண்டுகளை கட்சிக்காகவே அர்ப்பணித்தவன். எனவே என் வளர்ச்சி என் குடும்ப நிகழ்ச்சிகளை விட கட்சியை நான் பெரிதாக கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon