குழந்தையை காரில் விட்டு விட்டு கேம் விளையாட சென்ற தந்தை..பரிதாபமாக பலியான குழந்தை..!
அமெரிக்காவில் கொளுத்தும் வெயிலில் இரண்டு வயது குழந்தையை காரிலேயே விட்டுவிட்டு வீடியோ கேம் விளையாட சென்ற தந்தையால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
அமெரிக்காவின் ஹரியானாவைச் சேர்ந்த கிரிஸ்டோபர் என்பவர் தனது இரண்டு வயது மகளுடன் காரில் வீட்டிற்கு சென்றுள்ளார். காரிலேயே தூங்கிவிட்ட குழந்தையை எழுப்ப மனமில்லாமல் ஏசியை ஆன் செய்துவிட்டு வீட்டிற்கு சென்று வீடியோ கேம் விளையாடியுள்ளார்.
சுமார் மூன்று மணி நேரம் வீட்டிற்கு திரும்பிய மனைவி குழந்தையை தேடியுள்ளார். அதில் குழந்தை காரில் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.
காரில் ஏசி அரைமணி நேரத்தில் தானாக ஆப் ஆகிவிடும் என தெரிந்திருந்தும் குழந்தையை பற்றிய நினைப்பே இல்லாமல் அஜாக்கிரதையாக இருந்த கிறிஸ்டோபர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






