விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடக்கம்..!
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி காலமானதைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதனை அதிமுக புறக்கணித்த நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்டோர் களம் கண்டனர். தேர்தலில் முறைகேடு நடைபெறும் எனக் கூறி அதிமுக தேர்தலைப் புறக்கணித்துவிட்டது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில், 82 புள்ளி நான்கு எட்டு சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள், பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.
முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாக எண்ணப்படும் என்று விழுப்புரம் ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பழநி தெரிவித்துள்ளார்.





